Breaking News

TET Exam Preparation: ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸ் ஆகணுமா.. இந்த புக்ஸ் மட்டும் படிச்சா போதும்

 


டெட் (TET) தேர்வில் வெற்றி பெறுவது ஒரு ஆசிரியர் கனவின் முதல் படியாகும். இந்தத் தேர்வில் வெற்றிபெற மன உறுதியும், சரியான வழிகாட்டலும், முக்கியமாக சரியான புத்தகத் தேர்வும் தேவை.ஆசிரியராக வேண்டும் என்பது பணி,விருப்பம் என்பதையும் தாண்டி சிறந்த ஒரு சமூகம் உருவாக ஒரு பகுதியாக இருப்பவர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது டெட் தேர்வு பலர் இதை கடினம் என நினைக்கலாம், ஆனால் உண்மையில் கடினமானது கேள்வி அல்ல — அதை அணுகும் நம் மனம் தான் இன்று புத்தகத் திருவிழாக்கள், டிஜிட்டல் நூலகங்கள், அரசுப் பாடநூல்கள் எல்லாம் நம் கையில் இருக்கின்றன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி, மன உறுதியுடன் பயிற்சி செய்தால் டெட் தேர்வு வெற்றி எளிது என்று சொல்கிறார் திருநெல்வேலி சதக்கத்துல்லா கல்லூரியின் தமிழ் பேராசிரியர் சௌந்தர மகாதேவன்

டெட் (TET) தேர்வில் வெற்றி பெறுவது ஒரு ஆசிரியர் கனவின் முதல் படியாகும். இந்தத் தேர்வில் வெற்றிபெற மன உறுதியும், சரியான வழிகாட்டலும், முக்கியமாக சரியான புத்தகத் தேர்வும் தேவை. இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்கள், டெட் தேர்வுக்கான மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பாக உள்ளன. மேலும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவை கழகம் (TNSCERT) அலுவலகம் மாணவர்கள் நேரடியாகப் புத்தகங்களை வாங்கி படிக்கக்கூடிய முக்கிய மையமாகும்.

ஆரம்பநிலை ஆசிரியராக (Class 1–5) டெட் தேர்வு எழுதுபவர்கள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இதுவே முதல் தாளின் மையம். குறிப்பாக, தமிழ், கணிதம், சுற்றுச்சூழல், மற்றும் குழந்தை உளவியல் தொடர்பான தலைப்புகள் கேட்கப்படுகின்றன. இப்புத்தகங்களில் உள்ள ஒவ்வொரு பாடமும் குழந்தைகளின் கற்றல் நிலையைப் பிரதிபலிப்பதால், ஆசிரியர் அதை எளிமையாக விளக்கும் திறனை வளர்த்துக்கொள்வது அவசியம்.

இலக்கணம், சொற்பொருள், இலக்கிய வரலாறு ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். “தமிழ் எளிய இலக்கணம்”, “தமிழ் மொழி வரலாறு”, “தமிழ் இலக்கிய வரலாறு” போன்ற நூல்கள் பெருமளவில் கிடைக்கின்றன. இந்நூல்களை Tamil Digital Library, Tamil Virtual University, மற்றும் போன்ற இணைய தளங்களில் இலவசமாகப் பெறலாம். இது தமிழ் தாளுக்கான கேள்விகளை சமாளிக்க உதவும்.

டெட் தேர்வில் கேள்விகள் அனைத்தும் MCQ (Multiple Choice Questions) வகையாக இருக்கும். எனவே “கேள்வி–பதில்” முறையில் மட்டும் மனப்பாடம் செய்வது போதாது. ஒரு கேள்விக்கான பதிலை தெரிந்துகொள்வதோடு, மற்ற மூன்று தவறான பதில்களுக்கும் என்ன கேள்வி யென்று ஆராய்ந்து படிக்க வேண்டும். இது ஒரு தலைப்பை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும். இம்முறையில் தொடர்ந்து பயிற்சி செய்தால் டெட் தேர்வு மிகவும் எளிதாக மாறும்.

டெட் தேர்வில் குழந்தை உளவியல் (Child Psychology) மிக முக்கியமான பகுதி. இதனை படிக்கும்போது சிக்மன் பிராய்ட் (Sigmund Freud) தொடங்கி பல உளவியலாளர்களின் கோட்பாடுகளையும் அறிந்திருக்க வேண்டும். தமிழில் இதற்கான விளக்க நூல்கள் ருத்ரன், ராமானுஜம் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர்.

உயர்நிலை (Class 6–8) ஆசிரியர் டெட் தேர்வுக்கான மாணவர்கள், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக புத்தகங்களை முழுமையாகப் படிக்க வேண்டும். இதில் தமிழ், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், மற்றும் கல்வி உளவியல் போன்ற பிரிவுகள் இடம்பெறும். குறிப்பாக, மு. வரதசானர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்திய அகாடமி வெளியீடு நூல்கள் உயர்நிலை தமிழ் தாளுக்கான முக்கிய ஆதாரங்களாக உள்ளன

அரசு பாடப்புத்தகங்களை முதன்மையாகக் கொண்டு, கூடுதல் வழிகாட்டி நூல்களை உதவியாகப் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம். இன்று நூலகங்கள், டிஜிட்டல் தளங்கள், மற்றும் புத்தகத் திருவிழாக்கள் அனைத்தும் நம் கையில் உள்ளன. அவற்றை சரியான முறையில் பயன்படுத்தி, சீரான வாசிப்பு பழக்கத்தையும், சிந்தனையையும் வளர்த்துக் கொண்டால் — டெட் தேர்வு வெற்றியை எளிதாக அடைந்து விட முடியும். 

No comments