Breaking News

பள்ளி டூ கல்லூரி 10 பைசா செலவு இல்லாமல் படிக்கலாம்.. ஆனா பெற்றோர் 'ஒரு' விஷயத்தை மட்டும் செய்யணும்!

 


இந்தியாவில் குழந்தைகளுக்கான கல்வி கட்டண செலவுகள் ஆண்டுதோறும் அதிகரித்து தான் வருகின்றன. பெரிய நகரங்களில் பள்ளிக்கு சேர்க்க வேண்டும் என்றாலே சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கிறது.

இந்த சூழலில் தான் குழந்தைகளின் கல்வி கட்டண செலவை சமாளிப்பதற்கு பெற்றோர் எப்படி திட்டமிட்டு பணத்தை சேமிக்க வேண்டும் என்பது குறித்து சார்ட்டட் அக்கவுண்டன்ட் நிதின் கவுசிக் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு விரிவான பதிவினை வெளியிட்டு இருக்கிறார் . அதில் 99 சதவீத பெற்றோர் பிள்ளைகளின் கல்வி செலவுக்காக பல லட்சங்களில் செலவிடுகிறார்கள் , ஆனால் பின்வருமாறு திட்டமிட்டீர்கள் என்றால் அதன் பிறகு உங்களுடைய பிள்ளைகளின் கல்வி செலவுக்காக நீங்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை என குறிப்பிட்டு இருக்கிறார்.

குழந்தை கல்வி செலவுக்கு திட்டமிடல் மிகவும் அவசியம் என கூறும் அவர் மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயை பத்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தாலே போதும் அதன் பிறகு உங்கள் பிள்ளையின் கல்விக்காக நீங்கள் எந்த செலவும் செய்ய தேவை இல்லை கடனும் வாங்க தேவையில்லை என கூறியிருக்கிறார்.உங்கள் பிள்ளை பள்ளிக்கு சென்று பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் வரை நீங்கள் சம்பாதித்து அதற்காக பணம் கொடுக்க வேண்டிய தேவையில்லை நான் கூறும் இந்த 10 ஆண்டுகால எஸ்ஐபி முறையை பயன்படுத்துங்கள் என்கிறார்.

குழந்தை பிறந்த உடனே அந்த மாதத்தில் இருந்து மாதம் 10,000 ரூபாயை எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் . ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் என அந்த எஸ்ஐபி தொகையை உயர்த்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு இதனை தொடர்ந்தால் 10 வயதான உடன் முதலீட்டை நிறுத்திவிட வேண்டும். அப்போது தொடங்கி 22 வயது ஆகும் வரை நீங்கள் இந்த எஸ்ஐபி முதலீட்டு பணத்தில் இருந்து மாதந்தோறும் 25 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ள முடியும். உங்கள் பிள்ளையின் கல்விக்காக நீங்கள் கடன் வாங்க வேண்டாம் இந்த எஸ்ஐபியில் சேர்ந்து இருக்கக்கூடிய பணமே உங்கள் குழந்தையின் கல்வி செலவை முழுவதுமாக பார்த்துக் கொள்ளும் என கூறியிருக்கிறார்.

10 ஆண்டுகளில் நீங்கள் செய்யக்கூடிய முதலீடு 19.12 லட்சம் ரூபாய் 10 ஆண்டுகள் இறுதியில் அது 32.69 லட்சம் ரூபாய் என உயர்ந்திருக்கும். அடுத்த 12 ஆண்டுகளில் நீங்கள் 36 லட்சம் ரூபாயை குழந்தையின் கல்விக்காக இதில் இருந்து எடுத்து இருப்பீர்கள் அதன் பின்னரும் அந்த கணக்கில் 51 லட்சம் ரூபாய் இருக்கும், காம்பவுண்டிங் முறையில் உங்களுடைய பணத்தை வளர விடுங்கள் அதுதான் உங்களுக்கு லாபம் தரும் எனக் கூறியிருக்கிறார். 

 

No comments