தங்கத்தில் தில்லுமுல்லு.. விலை உயர்வால் புதிய பிரச்சனை வெடித்துள்ளது..!
தங்கம் விலையை உயர்வை தான் தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்ட வருகிறது, ஏற்கனவே சர்வதேச சந்தையில் நாணய மதிப்பு குறைவாலும், பொருளாதார மற்றும் வர்த்தக நிலையற்ற தன்மை காரணமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் முதல் சிறு முதலீட்டாளர்களும் தங்கத்தில் அதிகப்படியான முதலீட்டை செய்து வருகின்றனர். இதனால் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2700 டாலரில் இருந்து இன்று 4265 டாலரை தொட்டுள்ளது.
இப்படியிருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் தன்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகை வந்துள்ள காரணத்தால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களுக்கு தங்கம் விலை உயரும் போக்கு இருக்கும் காரணத்தால் சாமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் இந்தியாவில் தற்போது தங்கம், வெள்ளியில் தான் அதிகப்படியான முதலீட்டை செய்து வருகின்றனர்.
இதனால் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள காரணத்தால் இந்தியாவிற்குள் பல வழிகளில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே தங்க கடத்தல் அதிகமாக இருக்கும் காரணத்தாலேயே தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரியை குறைந்தது.
ஆனால் விலை உயர்வின் காரணமாக முறைகேடாக இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக தன்தேரால் மற்றும் தீபாவளி பண்டிகை அதன் பின் துவங்கும் திருமண சீசன் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் வேளையில் கடத்தல் அதிகரித்துள்ளது அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 1,19,000 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் உயர்ந்து 1,29,820 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 352 ரூபாய் உயர்ந்து 1,03,856 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 1000 ரூபாய் குறைந்து 2,06,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 40 ரூபாய் குறைந்து 46,850 ரூபாயாக உள்ளது.
இந்தியாவில் தங்கத்தை கடத்திக்கொண்டு வருவதை தடுக்கவே மத்திய அரசு இதன் இறக்குமதி வரியை கடந்த ஆண்டு 15 சதவீதத்தில் இருந்து வெறும் 6 சதவீதமாக குறைந்தது.
ஆனால் விலை உயர்வின் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் தங்கம் கடத்திப்பட்டு வருவது அதிகரித்துள்ளதாகவும், பல முயற்சிகள் சுங்க வரித்துறை அதிகாரிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளதாக சுங்கம் மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக கடத்தல் தங்கத்தை சந்தையில் விற்பது மிகவும் கடினம், பாதுகாப்பு பிரச்சனையை தாண்டி மிகவும் ஆபத்தானது. ஆனால் விழாக்காலம், சந்தையில் சப்ளை குறைந்து டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் எளிதில் விற்க முடியும் என்பதால் சமீபத்திய வாரங்களில் கடத்தல் அதிகரித்திருக்க கூடும் என சென்னை தங்க வர்த்தகர்கள் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளனர்.
No comments