வருமான வரி ரிட்டர்ன்.. தாக்கல் செய்தவர்களுக்கு குட் நியூஸ்.. அதிக refund கேட்டவர்களுக்கு.. சர்ப்ரைஸ் :
வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் பலருக்கும் இப்போது வரி ரிட்டர்ன் refund கிடைக்கவில்லை என்ற புகார் நிலவி வந்தது. அதிக refund கேட்டு ரிட்டர்ன் செய்தவர்களுக்கு அந்த தொகை இதுவரை கிடைக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்பட்டன. தற்போது இந்த அதிக வேல்யூ கொண்ட ரிட்டர்ன்களுக்கு refund வழங்கப்பட்டு வருகிறது.
50 ஆயிரத்திற்கு மேல் ரிட்டர்ன் தாக்கல் செய்தவர்களுக்கு அந்த refund தொகை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடைசி தேதி நிறைவு அடைந்து பல நாட்கள் ஆன நிலையில் தற்போது refund தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வருமான வரி தாக்கல் - பலரும் காத்திருப்பு
வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்த பலரும், இன்னும் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் ரீஃபண்ட் தொகைக்காகக் காத்திருக்கின்றனர். 2024-25 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை (ITR) நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவான செப்டம்பர் 15-க்கு முன்பே தாக்கல் செய்திருந்தாலும், இந்தத் தாமதம் பல வரி செலுத்துவோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுக்கு தற்போது Refund தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வருமான வரி கணக்கு முறைகேடு
இதற்கிடையே, வருமான வரி கணக்குகளில் முறைகேடாக விலக்கு கோருபவர்களைக் குறிவைத்து, நாடு முழுவதும் சரிபார்ப்பு நடவடிக்கையை வருமான வரித் துறை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பல ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது வரி செலுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
சிறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிப்பதற்கான விலக்குகள், சுகாதாரக் காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகள் (பிரிவு 80D மற்றும் 80DDB), HRA (பிரிவு 10(13A)), கல்வி மற்றும் வீட்டுக் கடன் மீதான வட்டி, மற்றும் வாகனங்கள் வாங்குவது தொடர்பான விலக்குகள் (பிரிவு 80E, 80EE, 80EEB) ஆகியவை விசாரிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.
வரி ஏய்ப்பு செய்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி செலுத்துவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த நடவடிக்கையின் மூலம், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, வரி ஏய்ப்பு தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் விசாரணை நடத்தப்பட்டு, சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்னும் சிலருக்கு ரீஃபண்ட் தாமதமாவதற்கான முக்கிய காரணங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
வருமான வரி ரிட்டர்ன்
வரி சரிபார்ப்பு மற்றும் அதிலுள்ள செயல்முறைத் தடைகள் ரீஃபண்ட் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். வரிக் கணக்கைத் தாக்கல் செய்தவுடன், அதை மின்னணு முறையில் சரிபார்ப்பது (e-verify) மிக அவசியம். இந்தச் சரிபார்ப்பை 30 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். ஆதார் OTP, நெட் பேங்கிங் அல்லது கையொப்பமிட்ட ஒப்புகைச் சீட்டை பெங்களூரில் உள்ள CPC-க்கு அஞ்சலில் அனுப்புவதன் மூலம் இதை மேற்கொள்ளலாம்.
இந்தச் சரிபார்ப்பு படிநிலையைத் தவறவிட்டால், தாக்கல் செய்யப்பட்ட கணக்கு செல்லாததாகக் கருதப்படும். இதனால் ரீஃபண்ட் பெறும் செயல்முறை தடைபடும். சில சமயங்களில், வரிக் கணக்குகள் சரிபார்க்கப்பட்டாலும், அவை முழுமையாகச் செயல்படுத்தப்படாமல் இருக்கலாம். இத்தகைய சூழல்களில், வரி செலுத்துவோர் செயலாக்கம் முடிவடையும் வரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
refund வருவதற்கான தாமதம் நீண்டால், வரி செலுத்துவோர் வருமான வரி போர்ட்டலில் உள்நுழைந்து "CPC-ITR" பிரிவின் கீழ் ஒரு புகாரைப் பதிவு செய்து, விரைவான செயலாக்கத்தைக் கோரலாம். வங்கித் தொடர்பான பிழைகளும் ரீஃபண்ட் தாமதத்திற்குக் காரணமாக அமைகின்றன. வங்கிகள் இணைக்கப்பட்டதாலும், IFSC குறியீடுகள் மாறியதாலும், கணக்கு விவரங்கள் தவறாக இருந்தால் ரீஃபண்ட் செயல்முறை பாதிக்கப்படலாம்.
இத்தகைய சமயங்களில், வருமான வரித்துறை பெரும்பாலும் ஒரு மின்னஞ்சல் எச்சரிக்கையை அனுப்பும். வரி செலுத்துவோர் "My Bank Details" பிரிவின் கீழ் தங்கள் வங்கி விவரங்களைப் புதுப்பித்து, "refund reissue" கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு விரைவில் refund கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

No comments