Post Office | ஒருமுறை டெபாசிட் செய்தால் மாதந்தோறும் ரூ.5,500 கிடைக்கும்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்!
Post Office MIS | ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகளுக்கு இந்த திட்டம் சிறந்தது. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும்.
தற்போது அனைவரும் பணத்தை எதிலாவது முதலீடு அல்லது சேமித்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த வகையில், அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் தான். சிறியவர்கள், பெண் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் பயனடையும் வகையில், போஸ்ட் ஆபிஸ் பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. ஏனென்றால், பெரும்பாலான போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் ஆபத்து இல்லாதவை. இங்கு நீங்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும். அதேபோல், இவற்றின் வட்டி விகிதங்களும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். இதற்கு அரசு உத்தரவாதமும் உண்டு.
மாதாந்திர வருமான திட்டம் (MIS) யாருக்கு சிறந்தது? ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இல்லத்தரசிகளுக்கு இந்த திட்டம் சிறந்தது. இதில் 5 ஆண்டுகளுக்கு ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் டெபாசிட் செய்த நாளிலிருந்து, போஸ்ட் ஆபிஸ் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு வட்டி செலுத்த தொடங்கும். இந்தத் திட்டத்திற்கு தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது வங்கிகளை விட அதிகம். நீங்கள் டெபாசிட் செய்யும் பணம் அப்படியே இருக்கும். மாதந்தோறும் உங்கள் போஸ்ட் ஆபிஸ் கணக்கில் வட்டி செலுத்தப்படும்.
உதாரணமாக, நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு சுமார் ரூ.616 வட்டி கிடைக்கும். அதேபோல், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.3,083 வட்டி கிடைக்கும். நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ, அதற்கு ஏற்ற வகையில், உங்களுக்கு வட்டி கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ரூ.1,000 முதல் முதலீடு செய்ய தொடங்கலாம். இதற்கு அதிகபட்ச வரம்பு கிடையாது. ஒரு நபரின் பெயரில் கணக்கைத் திறந்தால், அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் (அதாவது கூட்டுக் கணக்கு) ஒரு கணக்கைத் திறந்தால், அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
மாதத்திற்கு ரூ.5,550 வருமானம் எப்படி கிடைக்கும்? அதிகபட்ச வரம்பான ரூ.9 லட்சத்தை ஒரே கணக்கில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 7.4% வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு சரியாக ரூ.5,550 வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் காலமான 5 ஆண்டுகளில், உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் வட்டி கிடைக்கும்.
5 ஆண்டுகள் முடிந்தவுடன், நீங்கள் ஆரம்பத்தில் முதலீடு செய்த முழு அசல் தொகையும் (உதாரணமாக ரூ.9 லட்சம்) உங்களுக்குத் திருப்பித் தரப்படும். இந்தப் பணத்தை நீங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தலாம் அல்லது அதே மாதாந்திர வருமான திட்டத்தில் (MIS) ஆண்டுகளுக்கு மீண்டும் முதலீடு செய்து மாத வருமானத்தைத் தொடரலாம்.

No comments