Breaking News

Zoho-வின் அடுத்த அடி... Phonepe, Paytm, Gpay கதை முடியுது.. இங்கேயும் வந்துவிட்டார் ஸ்ரீதர் வேம்பு

 


டீக்கடை முதல் பெரிய பெரிய வணிக நிறுவனங்கள் வரை நாம் போன்பே, ஜிபே, பேடிஎம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகிறாம். அந்த வகையில் டிஜிட்டல் பணபரிவர்த்தனை துறையில் ஜோஹோ நிறுவனம் என்ட்ரி கொடுத்துள்ளது. அதன்படி ஜோஹோ சார்பில் Zoho payments என்ற பெயரில் ‛பாயிண்ட் ஆஃப் சேல்' கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போன்பே, ஜிபே, பேடிஎம் உள்ளிட்டவற்றுக்கு ‛ஆப்பு' வைக்க வாய்ப்புள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தற்போது முக்கிய விஷயத்தை வலியுறுத்தி வருகிறார். இந்தியர்கள் இந்தியாவின் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டும். இது இந்திய தொழிலதிபர்களையும், ஊழியர்களையும் ஊக்குவிக்கும் என்று மேடைக்கு மேடை முழங்கி வருகிறார்.

நம் நாட்டின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டி விட்டது. இதனால் நம் நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை நம் மக்கள் பயன்படுத்தினாலே போதும். நல்ல முன்னேற்றம் அடையலாம் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி ‛சுதேசி' இயக்கத்தை முன்னெடுத்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் நம் நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லும் ஏற்றுமதி சரிவை சந்தித்துள்ளது. இப்படியான சூழலில் தான் பிரதமர் மோடி இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்த கூறி வருகிறார். அந்த வகையில் தற்போது ஜோஹோ நிறுவனத்துக்கு ‛லக்' அடித்துள்ளது.

ஜோஹோ ஐடி நிறுவனம் தமிழ்நாட்டின் சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ‛அரட்டை' செயலியை அமெரிக்காவின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக அறிமுகம் செய்துள்ளது. மத்திய அமைச்சர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் ‛அரட்டை' செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

அதேபோல் டாக்குமென்டேஷன் உள்பட பல பணிகளுக்கு நம் நாட்டில் உள்ளவர்கள் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன்த்தின் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 (Microsoft Office 365) மற்றும் இன்னொரு அமெரிக்க நிறுவனமான கூகுளின் வொர்க்ஸ்பேஸ் (Google Workspace) உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு மாற்றாக தற்போது ஜோஹோ நிறுவனத்தின் ஜோஹோ வொர்க்பிளேஸ் (Zoho Workplace)மற்றும் ஜோஹோ ஆபிஸ் சூட் (Zoho Office Suite) உள்ளிட்டவற்றை பலரும் பயன்படுத்த தொடங்கி உள்னளர்.

இப்படி அமெரிக்காவின் நிறுவனங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஜோஹோ நிறுவனம் ‛ஆப்பு' வைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது ஜோஹோ நிறுவனம் இன்னொரு துறையிலும் கால்பதித்துள்ளது. அதுதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறை. அதாவது ஜோஹோ நிறுவனம் தற்போது பாயிண்ட் டூ சேல் (Point to Sale or POS) அறிமுகம் செய்துள்ளது. குளோபல் ஃபின்டெக் விழாவில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது இந்த பாயிண்ட் டூ சேல் கருவி என்பது க்யூஆர் கோட் மூலமாக பணம் செலுத்தும் வசதி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் வசதி, அதோடு பணம் செலுத்தப்பட்டதை சொல்லும் ஸ்பீக்கர், ரசீது வழங்குவது உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகம் செய்துள்ளது. தற்போது நம் நாட்டில் அதிகமாக போன்பே, பேடிஎம், ஜிபே உள்ளிட்டவற்றின் பாயிண்ட் டூ சேல் கருவிகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீக்கடை முதல் பெரிய பெரிய நிறுவனங்கள் வரை இந்த கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கு மாற்றாக ஜோஹோ தனது தயாரிப்பை வழங்கி உள்ளது.

அதுமட்டுமின்றி ஜோஹோவின் இந்த கருவி 4ஜி, வைபை வசதி மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவற்றின் இணைப்பையும் வழங்கி வருகிறது. இதனால் சிப் கார்டுகள், யுபிஐ மற்றும் QR குறியீடுகளைப் பயன்படுத்தி வணிகர்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற முடியும். இதன்மூலமாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்டவற்றுக்கு ஜோஹோ நிறுவனம் ஆப்பு வைக்க தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக ஜோஹோ நிறுவனம் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எங்களின் ‛அரட்டை' குழு தனது சேவையை விரிவுப்படுத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண ஒருங்கிணைப்பாளராக மாறியது. அதாவது ஆன்லைன் கட்டண செலுத்தும் முறையை அறிமுகம் செய்பபட்டது. இப்போது ஜோஹோ பேமெண்ட்ஸ் பாயிண்ட் ஆஃப் சேல் அறிகும் செய்வதன் மூலம் fintech-ல் நாங்கள் இன்னும் வலுவாக காலுண்ற உள்ளோம். இதனை பயன்படுத்தி வணிகர்கள் நேரடியாக பணத்தை பெறலாம்.

வணிகத்தில் உள்ள சவால்களை நிவர்த்தி செய்வதற்காகவும், இந்தியாவின் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் எபிசிஐ-யின் என்பிபிஎல் உடன் நாங்கள் இணைந்துள்ளோம். அதேபோல் ‛அரட்டை' செயலியில் ஜோஹோ பே-வை இணைக்க கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

No comments